அருள்மிகு திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் திருக்கோயில்
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலம். கொள்ளிக்காடர் என்று பதிகத்தில் இறைவனை சம்பந்தர் அழைக்கிறார். தீவண்ணநாதர் என்று வடமொழியில் இறைவனுக்கு மற்றுமொரு பெயர் உள்ளது. இங்குள்ள தேவியை பஞ்சின் மெல்லடியாள் என்று சம்பந்தர் கூறுகிறார். எனவே அம்மனும் இத்தலத்தில் அப்பெயரிலேயே அழைக்கப்படுகிறாள். சனிபகவானுக்குரிய சிறப்புத் தலமாக இத்தலம் விளங்குகிறது. திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ள திருக்கொள்ளிக்காடு பண்டு அடர்ந்த வனமாக அமைந்துள்ளது. நளனோடு இத்தலம் தொடர்படுத்தப்படுகிறது. இத்தலத்தில் முருகன் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இது தனிச்சிறப்பாகும்.
- பார்வை 4062