அருள்மிகு விளக்கொளிப் பெருமாள் திருக்கோயில்
இக்கோயிலில் மூலவர் கருவறை விமானம் ஸ்ரீகர விமானம் என்றழைக்கப்படுகிறது. இது கரக்கோயில் வகையைச் சார்ந்தது ஆகும். இலட்சுமி, ஹயக்கிரீவர், ஆண்டாள், ஆழ்வார்கள், வேதாந்த தேசிகர், தீபப்பிரகாசர், கருடன் ஆகியோருக்கு தனித்தனி சிறுகோயில்கள் அமைந்துள்ளன. வைணவ ஆச்சாரியாரான வேதாந்த தேசிகன் என்பவரின் தாய் தனக்கு குழந்தை வேண்டி இத்தலத்துப் பெருமாளிடம் வேண்டினார். பெருமாள் தன் கையில் இருந்த மணியே குழந்தையாக பிறக்கும்படி அருள்பாலித்தார் என தலவரலாறு கூறுகிறது. 1268 ஆம் ஆண்டு தோன்றிய வேதாந்த தேசிகர் 1369 வரை ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார்.
- பார்வை 709