அருள்மிகு மன்னார்குடி கைலாசநாதர் திருக்கோயில்
கைலாசநாதர் கோவில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. பாமணி ஆற்றின் மேற்கு கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு இரு நுழைவாயில்கள் இதன் தென்புற வாயில் பிரதான சாலையை நோக்கியது. மற்றொன்று கிழக்கு திசையை நோக்கியது. இராஜகோபுரம் காணப்படவில்லை. தென்புற வாயிலின் இருமருங்கிலும் நந்தவனம் உள்ளது. மூலவர் சந்நிதி மற்றும் அம்மன் சந்நிதி ஆகிய இரு சந்நிதிகளையும் உள்ளடக்கிய ஒரே ஒரு திருச்சுற்றைக் கொண்ட கோவில். கோவில் முழுமையும் நீண்ட நெடிய செங்கற் சுவரால் சூழப்பட்டுள்ளது.
- பார்வை 4947