அருள்மிகு எசாலம் இராமநாத ஈஸ்வரர் திருக்கோயில்
முதலாம் இராஜேந்திரன் சோழனின் கற்றளியான எசாலம் இராமநாதஈஸ்வரர் கோயிலில் 23க்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் 4 மணிகள், தூபக்கால் ஒன்று ஆகியவை எழுத்துப்பொறிப்புகளுடன் இக்கோயிலின் வளாகத்தில் புதையுண்டிருந்தன. மேலும் முதலாம் இராஜேந்திர சோழனால் வெளியிடப்பெற்ற எசாலம் செப்பேடுகளும் கண்டறியப்பட்டன. இவையாவும் பாதுகாப்புக் கருதி பல நூறு ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளன.
- பார்வை 1423