அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில்
சென்னை தாம்பரத்திலிருந்து குன்றத்தூர் வழியாக மாங்காடு செல்லலாம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து குமணன் சாவடி வழியாக மாங்காடு சென்றடையலாம். மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலாக இக்கோயில் விளங்குகிறது. இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் சோழர்கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. விமானம் தளப்பகுதி தற்போது சுதையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் இலிங்கவடிவில் இறைவன் காட்சியளிக்கிறார்.
- பார்வை 375