Primary tabs
கரிசலாங்கண்ணி
தாவரவியல் பெயர் : Eclipta alba (L) Hassa.
குடும்பம் : Asteraceae
வளரிடம் : தரிசு நிலங்கள், சதுப்பு நிலங்கள், புதர்கள், சாலையோரங்களிலும் காணப்படும்.
வளரியல்பு : சிறு உரோமம் உடைய ஓராண்டுச் சிறுசெடி. எதிரிலைகள், முட்டை வடிவ இலைகள், சிறுமஞ்சரிகள் நுனிகள் அல்லது கோணங்களிலுள்ள ஹெட்டிரோகேமஸ் கதிர் கொண்டவை. கதிர் சிறு மலர்கள். பெண் மலர்கள்அல்லது மலட்டுமலர்கள். வெள்ளை அரிதாக மஞ்சள்; இருபால் மலர்கள்; குழாய்போன்றவை; குறுகிய முக்கோண தட்டையாக்கப்பட்ட அக்கீன் வகைக் கனிகள்; கனிகளும் மலர்களும் வருட முழுவதும்.
மருத்துவப் பயன்கள் : முழுத்தாவரம் கல்லீரல் நச்சுத் தன்மையைத் தீர்க்கும். கல்லீரல், மண்ணீரல் பெரிதாவதால் உள்ள அடைப்புகளைப் போக்கும், வாந்திமருந்து தேவையுடன் சாற்றைக் கலந்து குழந்தைகளுக்கு ஏற்படும் காற்றுக்குழாய் சார்ந்த அடைப்புகளை குணப்படுத்தலாம். விளக்கெண்ணெயோடு சேர்த்துப் பூச்சிகளை அகற்றப் பயன்படும். மஞ்சள் காமாலைக்கு மிகவும் கண்கண்ட மருந்து. கூந்தல் தைலமாகப் பயன்படும். கஷாயம் கர்ப்பப்பை இரத்தப்போக்குக்குப் பயன்படும். பற்று தேள் கடிக்கு மருந்தாகும். வீக்கம் குறைக்கும்.