Primary tabs
செந்தலைக் கழுகுி

உடல் முழுவதும் கருஞ்சாம்பல் நிறத்திலும் தலையும் கழுத்தும் கொஞ்சம்கூட சிறகுகளோ முடிகளோ இல்லாமல் வழுக்கையாக செந்நிறத்தில் இருப்பதால் இந்தப் பறவைக்கு செந்தலைக் கழுகு என்று பெயர்.
76 முதல் 86 செ.மீ. நீளப் பறவை. எடை 6 கிலோ வரை இருக்கும். சிறகுகளை விரித்தால் நீளம்: 2 மீட்டர் வரை. பெண் பறவை முற்றிலும் பழுப்பு நிறத்தில் இருக்கும்
வட இந்தியாவில் அதிகம் காணப்படும் பறவை. சிங்கப்பூரிலும் இதைப் பார்க்கலாம்.
மனிதர்கள் வாழும் பகுதிகளிலும் விவசாய நிலங்களுக்கருகிலும் மற்றும் காடுகளிலும் இது வசிக்கும்.
குழுக்களாக வாழும் பறவை. மரங்களில் கூடு கட்டும். ஒரு சமயத்தில் ஒரு முட்டைதான் இடும். 45 நாட்களுக்குப் பிறகு முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும்.
இறந்த பிராணிகளின் உடலைச் சாப்பிட்டு உயிர்வாழும் பறவை. ஆனால் இதன் உணவே இதற்கு எமனாகி விட்டது. இறந்த உடல்களிலுள்ள விஷம் இதன் உடலில் கலந்து விடுவதால் இதன் வாழ்நாள் மிகக் குறைவு.இதனால் இந்தப் பறவை அரியவகையில் சேர்க்கப்பட்டுள்ளது.