தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆவாரை

  • ஆவாரை

    முனைவர் மரு.பெ.பாரதஜோதி
    இணைப்பேராசிரியர்
    சித்த மருத்துவத்துறை

    வேறு பெயர்கள் : ஏமபுட்டி, மேகாரி, தலபோடம், ஆகுலி.

    ஆங்கிலப் பெயர் : The Tanners Cassia

    தாவரவியல் பெயர் : Cassia auriculata Linn.

    செய்கைகள் (Actions)

    துவர்ப்பி - Astringent

    உரமாக்கி - Tonic

    குளிர்ச்சியுண்டாக்கி - Refrigirant

    உடல்தேற்றி - Alterative

    மருத்துவப் பயன்கள் :

    - “ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ” என்ற பழமொழியின் மூலம் ஆவாரையின் மகத்துவத்தை அறியலாம்.

    - ஆவாரம் பூவைச் சமைத்துச் சாப்பிட கற்றாழை நாற்றம், நீரிழிவு, உடலில் உப்புப் பூத்தல், உடல் வறட்சி போன்றவை தீரும்.

    - பூவைக் குடிநீரிட்டு பாலுடன் உண்ண உடல் சூடு தணியும்.

    - பூவை மணப்பாகு செய்து சாப்பிட்டால் வெள்ளை, மூத்திரரோகம், ஆண்குறி எரிச்சல் இவை தீரும்.

    - ஆவாரை விதையை உரைத்துக் கண்களில் இட சீழ் பிடித்த கண் நோய்கள் தீரும்.

    - ஆவாரம் பிசின் 4-10 கிராம் நீரில் கலந்து குடித்து வர வெள்ளை, சிறுநீர் எரிச்சல், நீரிழிவு தீரும்.

    - ஆவாரை, கொன்றை, நாவல், கடலழிஞ்சில், முத்தக்காசு, கோஷ்டம், மருதம்பட்டை இவற்றைச் சமஅளவு எடுத்து எட்டு பங்கு நீர் விட்டு ஒரு பங்காகக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர நீரிழிவு தீரும்.

    - ஆவாரம் பூ, வில்வ இலை, மாந்துளிர், வெந்தயம் இவற்றை சமஅளவு எடுத்து நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தினமும் 2 கிராம் அளவு காலை, மாலை உண்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.

    - ஆவாரை இலை, பூ, பட்டை, வேர் இவற்றைச் சமஅளவு எடுத்துப் பாலில் அரைத்துத் குடிக்க சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது நிற்கும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:00:44(இந்திய நேரம்)