தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

  • மஞ்சள்
    (Curcuma longa)

    முனைவர் மரு.பெ.பாரதஜோதி
    இணைப்பேராசிரியர்
    சித்த மருத்துவத்துறை

    - புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.

    - இரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பினைக் குறைக்கும் திறன் மஞ்சளுக்கு உள்ளது என்று ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    - வீக்கங்களைக் கரைக்க மஞ்சள் பெருமளவில் பயன்படுகிறது.

    - மஞ்சளில் உள்ள கர்குமின் (curcumin) எனும் வேதிப்பொருள் ஆக்ஸிகரணத்திற்கு எதிராகச் செயல்படுகிறது. இதனால் இது சிறந்த antioxidant ஆகச் செயல்படுகிறது.

    - மஞ்சளுடன் விளக்கெண்ணெய் கலந்து பாதத்தில் காணும் வெடிப்புகளுக்குத் தடவ வெடிப்புகள் மறையும்.

    - மஞ்சளைச் சுட்டு வரும் புகையை நுகர நீரேற்றம் தீரும்.

    - மஞ்சளுடன் வேப்பிலை சேர்த்து அரைத்து அம்மைக் கொப்புளங்கள் மேல் போட்டு வர எளிதில் புண்கள் குணமடையும்.

    - மஞ்சள் பொடியை நீருடன் உண்டால் மஞ்சள் காமாலை தீரும். குடல் வன்மையடையும்.

    - சணல் இலை, வெங்காயம், ஆளி விதை எண்ணெயுடன் மஞ்சள் பொடி சேர்த்துப் பசையாக்கி, மூலநோயில் வெளிவரும் மலக்குடல் (Rectal Prolapse) இறக்கத்தைப் போக்கப் பயன்படுத்தலாம்.

    - மஞ்சளை, சுண்ணாம்பு, பொட்டிலுப்புடன் கூட்டிச் சுடவைத்துச் சுளுக்கு, அடிபட்ட புண் இவைகளுக்குப் பூச குணமாகும்.

    - மஞ்சளுடன் ஆடாதொடை இலை சேர்த்து பசுநீர்ச் சேர்த்து அரைத்துப் பூச சொறிசிரங்குகள், நமைச்சல் தீரும்.

    - சாதத்துடன் மஞ்சள் சேர்த்து அரைத்துக் கட்டிகளின் மீது வைத்துக் கட்ட எளிதில் பழுத்து உடையும்.

    - மஞ்சளுடன், வெங்காயம், சேர்த்து வதக்கி வலி உள்ள இடங்களில் வைத்துக் கட்ட வலி தீரும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:04:55(இந்திய நேரம்)