Primary tabs
-
வல்லாரை
(Centella asiatica)
- வல்லாரை இலைப் பொடியை 100-300 கிராம் வரை பசுவின் பாலில் உண்டு வர மூளையைப் பலப்படுத்தி ஞாபக சக்தியை அதிகப்படுத்தும்.
- இலையுடன் வெந்தயம் சேர்த்து குடிநீரிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் சுரம், வயிற்றுக் கோளாறுகளை நீக்கத் தரலாம்.
- இலையை அரைத்து வைத்துக் கட்ட யானைக்கால் வீக்கம், விரை வீக்கம், கட்டிகள் இவை சரியாகும். இந்நோய்களில் ஏற்படும் சுரம் தீர இலையைச் சுரசம் செய்து 4,5 துளி வீதம் கொடுத்து வரலாம்.
- இலையுடன் சீரகம், சர்க்கரை கூட்டி அரைத்துக் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் சீதக் கழிச்சல், குருதிக் கழிச்சல் தீரும்.
- சிறிதளவு இலையுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து காலையில் மட்டும் கொடுத்து, மோர் சாதம் சாப்பிட்டு வர தீராத புண்கள் தீரும்.
- வல்லாரை இலையைத் துவையலாகச் செய்து, அதிக சுறுசுறுப்புடன் (Hyper acticity) காணப்படும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தீவிரம் குறையும்.
- இலைச்சாறுடன் பசும்பால், அதிமதுரத்தூள் சேர்த்துக் கொடுத்து வர குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு நோய்களும், பெரியோர்க்கு ஏற்படும் சுரம், மேக நோய், வயிற்று நோய்கள் தீரும்.