Primary tabs
-
இஞ்சி
(Zingiber officinalis)
- இஞ்சியைத் தேன் ஊறல், வெல்லப்பாகு ஊறல், ஊறுகாய் எனப் பல வகைகளில் பயன்படுத்தலாம்.
- இஞ்சியைச் சுத்தம் செய்து சிறு துண்டினை வாயிலிட்டு சுவைத்து வர தொண்டைக் கரகரப்பு, குரல் கம்மல் போன்றவை தீரும். மேலும் தொண்டை மற்றும் நாக்கைத் தூய்மைப்படுத்தும்.
- இஞ்சியால் சூல் கொண்ட மகளிர்க்கு ஏற்படும் வாந்தி, மயக்கம் (morning sickness)தீரும். உணவு நச்சுகளைத் (food poison) தடுக்கும்.
- இஞ்சிச் சாறுடன் வெங்காயச் சாறு சேர்த்துக் கொடுக்க வாந்தி, ஒக்காளம் இவை தீரும்.
- இஞ்சிச் சாறுடன் கற்கண்டு சேர்த்துக் கொடுத்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.
- இஞ்சிச் சாறுடன், எலுமிச்சை சாறு, ஈர வெங்காயச் சாறு ஓர் அளவாகக் கலந்து 5 மி.லி சாப்பிட இரைப்பு இருமல் தீரும்.
- இஞ்சியைப் பாலில் அரைத்து 5 கிராம் அளவு எடுத்து 15 மி.லி பாலில் கலந்து காலை, மாலை கொடுத்து வர இருமல், இளைப்பு, குன்மம், மயக்கம் தீரும். நன்றாகப் பசி எடுக்கும்.
- இஞ்சிச் சாற்றைச் சுரசம் செய்து தேன் கலந்து குழந்தைகளுக்கு 5 மி.லி அளவு வாரம் ஒருமுறை கொடுத்து வர வயிறு மந்தம் தீரும்.
- இஞ்சிச் சாறுடன், மாதுளம் பூச்சாறு, தேன் சமஅளவு கலந்து 15 மி.லி சாப்பிட ஈளை, இருமல் தீரும்.