குடும்ப விளக்கு
பாடஅறிமுகம்
Introduction to Lesson
குடும்பம் என்பது எல்லாரும் கூடி வாழும் அமைப்பு ஆகும். அப்பா, அம்மா, மகன், மகள், தாத்தா, பாட்டி எல்லாரும் கூடி வாழ்வது குடும்பம் ஆகும்.
குடும்பம் நல்ல குடும்பமாக இருந்தால் எல்லாருக்கும் இன்பம்.
நல்ல குடும்பம் ஒளிதரும் விளக்கைப் போன்றது. அதனால் பாரதிதாசன் குடும்ப விளக்கு என்று ஒரு நூலை எழுதினார்.
இந்த நூலில் நல்ல குடும்பம் எப்படி இருக்க வேண்டும் எனக் காட்டுகிறார்.
இந்நூலில் உள்ள “விருந்தோம்பல்” என்னும் பகுதியில் இருந்து ஒரு தொடர் கவிதைப் பகுதி பாடமாக உள்ளது.