• அண்டா |
- பெரிய உருளை வடிவப் பாத்திரம் |
• ஆன் கறந்த பால் |
- பசுவிடம் இருந்து பெற்ற பால் |
• இட்டீர் |
- கொடுத்தீர்கள் |
• உவந்தாள் |
- இன்பம் அடைந்தாள்; மகிழ்ந்தாள். |
• ஐயன் |
- தலைவன் |
• குந்தி |
- அமர்ந்து; உட்கார்ந்து |
• குழல் |
- தலைமுடி; கூந்தல் |
• செந்தாழை |
- சிவந்த தாழம்பூ, ஒருவகைப் பூ |
• செம்பு |
- தண்ணீர் குடிக்கப் பயன்படும் சிறு பாத்திரம் |
• சோளம் |
- ஒருவகை உணவுப் பொருள் (தானியம்) |
• தமிழ்க் கழகம் |
- தமிழ்ப் பள்ளிக்கூடம் |
• தீட்டி |
- பக்குவப் படுத்தி |
• துழவி |
- மேலும் மேலும் கைகளால் பரப்பி |
• தெவிட்டாத |
- உண்ணும் ஆசையைத் தணிக்காத |
• தேன்குழல் |
- தின்பண்டம் - முறுக்கு |
• தொன்று வந்த |
- வழிவழியாய் வந்த, பழைய |
• நடைவீடு |
- வீட்டின் முன்புறப் பகுதி |
• நன்னூல்கள் |
- நல்ல நூல்கள் |
• நல்கி |
- கொடுத்து |
• நெடும்பேழை |
- அலமாரி |
• பண்ணியம் |
- பண்ணியாரங்கள், தின்பண்டங்கள் |
• பருகும்படி |
- குடிக்கும்படி |
• பாய் |
- படுப்பதற்காகப் போடப்படும் விரிப்பு |
• பாரீர் |
- பாருங்கள் |
• பெண்ணரசி |
- பெண்களுள் அரசி போன்றவள், தலைவி |
• மணிப்பொறி |
- கடிகாரம் (clock) |
• மேனி |
- உடல் |
• மொண்டு |
- தண்ணீர் எடுத்துத் தருதல் |
• விண்டபின் |
- சொன்னபின் |
• விருந்து |
- புதிதாக வீட்டிற்கு வருபவர்கள் (guests) |
• விலாப் புடைக்க |
- வயிறு நிரம்ப |
• வெண்தாழை |
- வெள்ளைத் தாழம்பூ |