குடும்ப விளக்கு

குடும்ப விளக்கு

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  பாரதிதாசனின் இயற்பெயர் யாது?

பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.

2.  பாரதிதாசன் இயற்றிய நூல்களுள் இரண்டன் பெயர்களைத் தருக.

பாரதிதாசன் இயற்றிய நூல்களுள் இரண்டு பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு.

3.  விருந்தினரை வரவேற்ற குடும்பத் தலைவியின் முகம் எவ்வாறு இருந்தது?

விருந்தினரை வரவேற்ற குடும்பத் தலைவியின் முகம் அன்றலர்ந்த செந்தாமரை போல இருந்தது.

4.  செம்பில் தண்ணீர் மொண்டு விருந்தினர்களிடம் கொடுத்த தலைவி கூறியது யாது?

செம்பில் தண்ணீர் மொண்டு விருந்தினர்களிடம் கொடுத்த தலைவி "புறந்தூய்மை முடிப்பீர்" என்று கூறினாள்.

5.  தலைவி, விருந்தினர் சாய்ந்திருக்கத் தந்தது யாது?

தலைவி, சாய்ந்திருக்கத் தந்தது நாற்காலி.

6.  விருந்தினர்களின் பெட்டி படுக்கைகளைத் தலைவி எங்கு வைத்தாள்?

விருந்தினர்களின் பெட்டி படுக்கைகளைத் தலைவி அருகிலுள்ள அறையில் வைத்தாள்.

7.  விருந்தினருக்குத் தலைவி பருகக் கொடுத்தது யாது?

விருந்தினருக்குத் தலைவி பருகக் கொடுத்தது பசும்பால்.

8.  உண்ணத் தெவிட்டாத தின்பண்டம் யாது?

உண்ணத் தெவிட்டாத தின்பண்டம் பண்ணியம்.

9.  விருந்தினர் படிப்பதற்குத் தலைவி எதைத் தந்தாள்?

விருந்தினர் படிப்பதற்குத் தலைவி நூல்களைத் தந்தாள்.

10.  பாவேந்தர் பாரதிதாசனின் மற்றொரு சிறப்புப் பெயர் என்ன?

பாவேந்தர் பாரதிதாசனின் மற்றொரு சிறப்புப் பெயர் புரட்சிக் கவிஞர் ஆகும் .