குடும்ப விளக்கு
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author

பாரதிதாசன்
குடும்ப விளக்கு நூலை எழுதியவர் பாரதிதாசன். இவர் புதுச்சேரியில் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் கனக சுப்புரத்தினம்.
இவர் பாரதியார் மேல் அன்பு கொண்டவர்; புதுச்சேரிக்குப் பாரதியார் வந்த போது உடன் இருந்தவர்; அவருக்கு உதவிகள் செய்தவர். பாரதியார் மீது கொண்ட ஈர்ப்பினால் இவர் தனக்குப் பெற்றோர் வைத்த கனக சுப்புரத்தினம் என்ற பெயரை மாற்றிக் கொண்டார். இவர் தம் பெயரைப் பாரதிதாசன் [பாரதி + தாசன்(அடியார்)] என மாற்றிக் கொண்டார்.
இவருக்குப் பாவேந்தர், புரட்சிக் கவிஞர் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.
இவர் அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, தமிழியக்கம் ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார்.