நெடுங்கவிதை
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே!
கவிதை என்பது இரண்டு வரிகளிலும் அமையலாம். இருபது வரிகளிலும் அமையலாம். இரண்டாயிரம் வரிகளிலும் தொடர்ந்து அமையலாம்.
இரு வரிகளில் அமைந்தது திருக்குறள். இரண்டாயிரம் வரிகளுக்கு மேலே தொடர்ந்து செல்வது சிலப்பதிகாரம்.
தொடர்ந்து செல்லும் கவிதையைத் தொடர்நிலைச் செய்யுள் என்று கூறுவார்கள்.
செய்யுள் என்பது படிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமை தரும் கவிதை வடிவம். தொடர்நிலைச் செய்யுள் என்பது தொடர்ந்து படிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமை தருவது.
இவ்வகையில் அமைந்துள்ள குடும்ப விளக்கு என்ற தொடர்நிலைச் செய்யுளை (தொடர் கவிதையை) இப்பாடம் உங்களுக்குத் தருகிறது.