குடும்ப விளக்கு

குடும்ப விளக்கு

மையக்கருத்து
Central Idea


விருந்தினரை வரவேற்பதில் தமிழ் மக்கள் சிறப்பு உடையவர்கள். அவர்கள் வந்த விருந்தினர் இன்பம் பெறுமாறு வரவேற்பார்கள். விருந்தினரை வரவேற்கும் முறையைக் குடும்ப விளக்கு நூலில் பாரதிதாசன் காட்டியுள்ளார். வீட்டிற்கு வருபவரை ‘வருக’ என அழைக்க வேண்டும். அவர்கள் உண்ண, உறங்க, தங்க ஏற்ற வகையில் வசதிகள் செய்து தர வேண்டும். வந்தவர்களுக்கு வெற்றிலை தரலாம். வந்த பெண்களுக்குப் பூ தரலாம். படிக்க நூல்கள் தரலாம். இவ்வாறு வரவேற்பதில் இன்பம் கொள்பவர்கள் தமிழர்கள்.

The Tamils are known for their hospitality and gesture of receiving guests. They receive the guests with a smiling face, that the guests are immediately happy. Bharathidasan has described this kind of culture in his work book named as “Kudumba Vilakku”. Should greet the guests, say “Varuga Varuga” (Come, Please come) should arrange for their comfortable stay and provide them good food. To guests, they give betel leaves. To women, they offer flowers. They provide them good books to read. The Tamils derive pleasure from treating guests so nicely and affectionately.