முகப்பு |
நற்றாய் |
29. பாலை |
நின்ற வேனில் உலந்த காந்தள் |
||
அழல் அவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது, |
||
ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென, |
||
மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய, |
||
5 |
புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறி |
|
யாங்கு வல்லுநள்கொல்தானே-யான், 'தன் |
||
வனைந்து ஏந்து இள முலை நோவகொல்!' என |
||
நினைந்து, கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன் |
||
பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ, |
||
10 |
வெய்ய உயிர்க்கும் சாயல், |
|
மை ஈர் ஓதி, பெரு மடத்தகையே? |
உரை | |
மகள்போக்கிய தாய்சொல்லியது.- பூதனார்
|
110. பாலை |
பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால் |
||
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி, |
||
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல், |
||
'உண்' என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர் |
||
5 |
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று, |
|
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர் |
||
பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி, |
||
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி |
||
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்? |
||
10 |
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென, |
|
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள், |
||
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல, |
||
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே! |
உரை | |
மனைமருட்சி; மகள்நிலை உரைத்ததூஉம் ஆம்.-போதனார்
|
143. பாலை |
ஐதே கம்ம யானே; ஒய்யென, |
||
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து, |
||
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும், |
||
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும், |
||
5 |
கிள்ளையும், 'கிளை' எனக் கூஉம்; இளையோள் |
|
வழு இலள் அம்ம, தானே; குழீஇ, |
||
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர் |
||
இன்னா இன் உரை கேட்ட சில் நாள் |
||
அறியேன் போல உயிரேன்; |
||
10 |
'நறிய நாறும் நின் கதுப்பு' என்றேனே. |
உரை |
மனை மருட்சி.-கண்ணகாரன் கொற்றனார்
|
179. பாலை |
இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென, |
||
பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி, |
||
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள் |
||
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு, |
||
5 |
யானும் தாயும் மடுப்ப, தேனொடு |
|
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி, |
||
நெருநலும் அனையள்மன்னே; இன்றே, |
||
மை அணற் காளை பொய் புகலாக, |
||
அருஞ் சுரம் இறந்தனள் என்ப-தன் |
||
10 |
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே. |
உரை |
மனை மருட்சி
|
184. பாலை |
ஒரு மகள் உடையேன் மன்னே; அவளும் |
||
செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு |
||
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்; |
||
'இனியே, தாங்கு நின் அவலம்' என்றிர்; அது மற்று |
||
5 |
யாங்ஙனம் ஒல்லுமோ? அறிவுடையீரே! |
|
உள்ளின் உள்ளம் வேமே-உண்கண் |
||
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என் |
||
அணி இயற் குறுமகள் ஆடிய |
||
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே. |
உரை | |
மனை மருட்சி
|
234. குறிஞ்சி |
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது |
||
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித் |
||
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள் |
||
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே |
||
5 |
அஃது ஆன்று |
|
அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு |
||
கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன் |
||
பங்குனி விழவின் உறந்தையொடு |
||
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே. |
உரை | |
செவிலியால் அறத்தொடு நிற்கப்பட்ட நற்றாய், தந்தை முதலியோர்க்கு அறத்தொடு நின்றது.
|
271. பாலை |
இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி |
||
பைந் தாது எருவின் வைகு துயில் மடியும் |
||
செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய, |
||
செல் பெருங் காளை பொய்ம் மருண்டு, சேய் நாட்டுச் |
||
5 |
சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர் |
|
வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று, |
||
வீ சுனைச் சிறு நீர் குடியினள், கழிந்த |
||
குவளை உண்கண் என் மகள் ஓரன்ன, |
||
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம், |
||
10 |
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு, |
|
மா இருந் தாழி கவிப்ப, |
||
தா இன்று கழிக, எற் கொள்ளாக் கூற்றே. |
உரை | |
மனை மருண்டு சொல்லியது.
|
279. பாலை |
வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத் |
||
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ, |
||
வைகு பனி உழந்த வாவல், சினைதொறும், |
||
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப, |
||
5 |
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு |
|
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப, |
||
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை |
||
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து, |
||
அதர் உழந்து அசையினகொல்லோ-ததர்வாய்ச் |
||
10 |
சிலம்பு கழீஇய செல்வம் |
|
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே? |
உரை | |
மகட் போக்கிய தாய் சொல்லியது.-கயமனார்
|
293. பாலை |
மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி, |
||
பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன் |
||
இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து, |
||
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப் |
||
5 |
பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல், |
|
பெரு விதுப்புறுகமாதோ-எம் இற் |
||
பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ, |
||
கொண்டு உடன் போக வலித்த |
||
வன்கண் காளையை ஈன்ற தாயே. |
உரை | |
தாய் மனை மருண்டு சொல்லியது; அவரிடத்தாரைக் கண்டு சொல்லியதூஉம் ஆம்.- கயமனார்
|
305. பாலை |
வரி அணி பந்தும், வாடிய வயலையும், |
||
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், |
||
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற, |
||
தமியே கண்ட தண்டலையும் தெறுவர, |
||
5 |
நோய் ஆகின்றே-மகளை!-நின் தோழி, |
|
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை |
||
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி, |
||
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி, |
||
இலங்கு இலை வெள் வேல் விடலையை |
||
10 |
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே. |
உரை |
நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம்.-கயமனார்
|