முகப்பு |
குதிரை (பரி, மா, இவுளி, புரவி) |
21. முல்லை |
விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர் |
||
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ, |
||
வேண்டு அமர் நடையர், மென்மெல வருக! |
||
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு |
||
5 |
ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்- |
|
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன |
||
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக் |
||
காமரு தகைய கானவாரணம் |
||
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் |
||
10 |
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, |
|
நாள் இரை கவர மாட்டி, தன் |
||
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே! | உரை | |
வினை முற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மருதன் இளநாகனார்
|
58. நெய்தல் |
பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர் |
||
சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின் |
||
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல, |
||
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்மாதோ- |
||
5 |
வீரை வேண்மான் வெளியன் தித்தன் |
|
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின் |
||
வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப, |
||
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து, |
||
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை |
||
10 |
நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன் |
|
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே! | உரை | |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு நோக்கி, தோழி மாவின்மேல்வைத்துச் சொல்லியது.- முதுகூற்றனார்
|
63. நெய்தல் |
உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர் |
||
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண், |
||
கல்லென் சேரிப் புலவற் புன்னை |
||
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் |
||
5 |
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால், |
|
அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப, |
||
பசலை ஆகி விளிவதுகொல்லோ- |
||
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் |
||
கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி |
||
10 |
திரை தரு புணரியின் கழூஉம் |
|
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே? | உரை | |
அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-உலோச்சனார்
|
78. நெய்தல் |
கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி |
||
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய, |
||
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம், |
||
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல், |
||
5 |
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை, |
|
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்; |
||
கேட்டிசின்-வாழி, தோழி!-தெண் கழி |
||
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும், |
||
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா |
||
10 |
வலவன் கோல் உற அறியா, |
|
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே! | உரை | |
வரைவு மலிந்தது.-கீரங்கீரனார்
|
81. முல்லை |
இரு நிலம் குறையக் கொட்டிப்பரிந்தின்று |
||
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள், |
||
மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி |
||
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப, |
||
5 |
பூண்கதில்-பாக!-நின் தேரே: பூண் தாழ் |
|
ஆக வன முலைக் கரைவலம் தெறிப்ப |
||
அழுதனள் உறையும் அம் மா அரிவை |
||
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய |
||
முறுவல் இன் நகை காண்கம்!- |
||
10 |
உறு பகை தணித்தனன், உரவு வாள் வேந்தே. | உரை |
வினை முற்றிய தலைவன்தேர்ப்பாகற்கு உரைத்தது.-அகம்பன்மாலாதனார்
|
91. நெய்தல் |
நீ உணர்ந்தனையே-தோழி!-வீ உகப் |
||
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப் |
||
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு |
||
உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை |
||
5 |
ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன், |
|
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை, |
||
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும் |
||
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப் |
||
பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய, |
||
10 |
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க் |
|
கடு மாப் பூண்ட நெடுந் தேர் |
||
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே? | உரை | |
தோழி, தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது.-பிசிராந்தையார்
|
121. முல்லை |
விதையர் கொன்ற முதையல் பூழி, |
||
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் |
||
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை, |
||
அரலை அம் காட்டு இரலையொடு, வதியும் |
||
5 |
புறவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே: |
|
'எல்லி விட்டன்று, வேந்து' எனச் சொல்லுபு |
||
பரியல்; வாழ்க, நின் கண்ணி!-காண் வர |
||
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா |
||
வண் பரி தயங்க எழீஇ, தண் பெயற் |
||
10 |
கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய, |
|
எல் விருந்து அயரும் மனைவி |
||
மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே! | உரை | |
வினை முற்றி மறுத்தரும்தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது.-ஒரு சிறைப்பெரியனார்
|
135. நெய்தல் |
தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை |
||
மா அரை புதைத்த மணல் மலி முன்றில், |
||
வரையாத் தாரம் வரு விருந்து அயரும் |
||
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர் |
||
5 |
இனிது மன்றம்ம தானே-பனி படு |
|
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய, |
||
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும், |
||
வால் உளைப் பொலிந்த, புரவித் |
||
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே. | உரை | |
'வரைவு நீட்டிப்ப அலர்ஆம்' எனக் கவன்ற தோழி சிறைப்புறமாகச்சொல்லியது.-கதப்பிள்ளையார்
|
149. நெய்தல் |
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி, |
||
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி, |
||
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற, |
||
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப, |
||
5 |
அலந்தனென் வாழி-தோழி!-கானல் |
|
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல் |
||
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ, |
||
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு |
||
செலவு அயர்ந்திசினால், யானே; |
||
10 |
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே! | உரை |
தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது; சிறைப்புறமாகச் சொல்லியதூஉம் ஆம்.- உலோச்சனார்
|
150. மருதம் |
நகை நன்கு உடையன்-பாண!-நும் பெருமகன்: |
||
'மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி, |
||
அரண் பல கடந்த முரண் கொள் தானை |
||
வழுதி, வாழிய பல! எனத் தொழுது, ஈண்டு |
||
5 |
மன் எயில் உடையோர் போல, அஃது யாம் |
|
என்னதும் பரியலோ இலம்' எனத் தண் நடைக் |
||
கலி மா கடைஇ வந்து, எம் சேரித் |
||
தாரும் கண்ணியும் காட்டி, ஒருமைய |
||
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்ச, |
||
10 |
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக் |
|
கதம் பெரிது உடையள், யாய்; அழுங்கலோ இலளே. | உரை | |
தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது.-கடுவன் இளமள்ளனார்
|
181. முல்லை |
உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல் |
||
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி, |
||
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை |
||
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன |
||
5 |
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின், |
|
துவலையின் நனைந்த புறத்தது அயலது |
||
கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து, |
||
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப, |
||
கையற வந்த மையல் மாலை |
||
10 |
இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த |
|
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப |
||
வந்தன்று, பெருவிறல் தேரே; |
||
உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே. | உரை | |
வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.
|
245. நெய்தல் |
நகையாகின்றே-தோழி!-'தகைய |
||
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை |
||
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ, |
||
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி, |
||
ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல், |
||
தெளி தீம் கிளவி! யாரையோ, என் |
||
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?' என, |
||
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி, |
||
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின் |
||
10 |
தான் அணங்குற்றமை கூறி, கானல் |
|
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி, |
||
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே | உரை | |
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது.-அல்லங்கீரனார்
|
380. மருதம் |
நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு |
||
மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும், |
||
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற, |
||
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே; |
||
5 |
வால் இழை மகளிர் சேரித் தோன்றும் |
|
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால் |
||
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் |
||
எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்; |
||
கொண்டு செல்-பாண!-நின் தண் துறை ஊரனை, |
||
10 |
பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப் |
|
புரவியும் பூண் நிலை முனிகுவ; |
||
விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே! | உரை | |
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.-கூடலூர்ப் பல்கண்ணனார்
|