முகப்பு |
ஆசிரியர் பெயர் இல்லாதவை |
191. முல்லை |
உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?- |
||
நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம் |
||
தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத் |
||
தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய |
||
ஏதிலாளர் இவண் வரின், 'போதின் |
||
பொம்மல் ஓதியும் புனையல்; |
||
எம்மும் தொடாஅல்' என்குவெம்மன்னே. |
உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. |
201. குறிஞ்சி |
அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி, |
||
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு, |
||
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை |
||
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது |
||
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும் |
||
கழை நிவந்து ஓங்கிய சோலை |
||
மலை கெழு நாடனை வரும் என்றோளே! |
உரை | |
கடிநகர் புக்கு, 'வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. |
256. பாலை |
'மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப் |
||
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி, |
||
மான் ஏறு உகளும் கானம் பிற்பட, |
||
வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத் |
||
தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?' எனச் |
||
சொல்லாமுன்னர், நில்லா ஆகி, |
||
நீர் விலங்கு அழுதல் ஆனா, |
||
தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே. |
உரை | |
பொருள் வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது. |
313. நெய்தல் |
பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை |
||
நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு, |
||
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவனொடு |
||
யாத்தேம்; யாத்தன்று நட்பே; |
||
அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே. |
உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவு உணர்ந்து, 'பண்பிலர்' என்று இயற்பழித்த தோழிக்கு, 'அவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோ!' என்று,சிறைப்புறமாகத் தலைமகள் இயற்பட |
321. குறிஞ்சி |
மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன், |
||
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன், |
||
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்- |
||
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை; |
||
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு, |
||
செங் கண் இரும் புலி குழுமும்; அதனால், |
||
மறைத்தற் காலையோ அன்றே; |
||
திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே. |
உரை | |
தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது. |
326. நெய்தல் |
துணைத்த கோதைப் பணைப் பெருந் தோளினர் |
||
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த |
||
சிறு மனைப் புணர்ந்த நட்பே-தோழி!- |
||
ஒரு நாள் துறைவன் துறப்பின், |
||
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே, |
உரை | |
சிறைப்புறம். |
375. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி!-இன்று அவர் |
||
வாரார் ஆயினோ நன்றே-சாரல் |
||
சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து |
||
இரவு அரிவாரின், தொண்டகச் சிறு பறை |
||
பானாள் யாமத்தும் கறங்கும். |
||
யாமம் காவலர் அவியாமாறே. |
உரை | |
இரவுக்குறிக்கண், சிறைப்புறமாகத் தோழி தலைமகற்குச் சொல்லுவாளாய், இரு பொழுதும் மறுத்து வரைவு கடாயது. |
379. பாலை |
இன்று யாண்டையனோ-தோழி!-குன்றத்துப் |
||
பழங் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு, |
||
கண் அகன் தூ மணி, பெறூஉம் நாடன், |
||
'அறிவு காழ்க்கொள்ளும் அளவை, செறிதொடி! |
||
எம்மில் வருகுவை நீ' எனப் |
||
பொம்மல் ஓதி நீவியோனே? |
உரை | |
நொதுமலர் வரைவுழித் தோழி அறத்தோடு நின்றது. |
381. நெய்தல் |
தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய் |
||
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது, |
||
பசலை ஆகி, விளிவதுகொல்லோ- |
||
வெண் குருகு நரலும் தண் கமழ் கானல், |
||
பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி, |
||
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு |
||
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே? |
உரை | |
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனைத் இயற்பழித்தது. |
395. பாலை |
நெஞ்சே நிரை ஒல்லாதே; அவரே, |
||
அன்பு இன்மையின், அருள் பொருள் என்னார்; |
||
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே; |
||
அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போலக் |
||
களையார் ஆயினும், கண் இனிது படீஇயர்; |
||
அஞ்சல் என்மரும் இல்லை; அந்தில் |
||
அளிதோதானே நாணே- |
||
ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படினே! |
உரை | |
வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளாகிய கிழத்தி, 'நாம் ஆண்டுச் சேறும்' எனத் தோழிக்கு உரைத்தது. |