Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
3.காப்பியக் கட்டமைப்பு என்றால் என்ன? சீவக சிந்தாமணி எவ்வாறு கட்டமைக்கப் பட்டுள்ளது?
ஒரு கதையை காப்பிய மரபுப்படி இலக்கியப்படுத்துவதையே கட்டமைப்பு என்பர். அது அகநிலை, புறநிலை எனப் பகுக்கப்படும். சிந்தாமணியின் புறநிலைக் கட்டமைப்பு இலம்பகம், பாடல் அமைப்பு விருத்தம். அகநிலைக் கட்டமைப்பில் அதன் உள்ளடக்கம் அமையும். இது மலை, கடல், நாடு என வருணனையாகவும், திருமணம், புதல்வர்ப்பேறு, மந்திரம், செலவு, தூது என நிகழ்ச்சி சித்திரிப்பாகவும் அமையும்.