தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காப்பியத்தில் செய்தி

  • 3.4 காப்பியத்தில் செய்தி

    இராவண காவியம் தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளாக ஒழுக்கமுடைமை, உயிர்க்கொலை மறுப்பு, விருந்தோம்பல், பிறன்மனை நோக்காப் பேராண்மை முதலியவற்றைக் கூறுகிறது. வடவர் திராவிடர் என்ற பகுப்பில் வடவர் பண்பாட்டிலிருந்து திராவிடர் பண்பாடு வேறுபட்டிருப்பதால் காப்பியச் செய்தியாக இப்பண்பாட்டுக் கூறுகள் இடம் பெற்றுள்ளன.

    பண்பாடு

    இராவண காவியம் தமிழர்களின் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது. மாந்தர்களுக்குள் இருக்கும் நல்லுறவின் வெளிப்பாடாக விளங்குவதுதான் பண்பாடு எனலாம். மிகப் பழமையான இனமான தமிழர் இனம் பண்பட்ட இனமாக மிளிரப் பண்பாடு அடிப்படையாகும்.

    ஒழுக்கமுடைமை, உயிர்க் கொலை மறுப்பு, விருந்தோம்பல், பிறன்மனை நோக்காப் பேராண்மை முதலியன இப்பண்பாட்டின் விளக்கங்களாக இராவண காவியத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 21-07-2017 19:04:47(இந்திய நேரம்)