Primary tabs
-
பாடம் - 3
A03133 இசுலாமியர் ஆட்சி
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இசுலாமியர் தமிழ்நாட்டின் மீது ஏன் படையெடுப்பு நடத்தினர் என்பதற்கான காரணங்களைப் பற்றி விளக்குகிறது.
மதுரை ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் டெல்லி சுல்தானியர் ஆட்சியின் கீழ் இருந்த வரலாற்றை விளக்குகிறது.
இந்து அரசர்கள் எவ்வாறு வீரவுணர்வு கொண்டு எழுந்து இசுலாமியர் மீது படையெடுப்பு நடத்தினர் என்பது பற்றியும் விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- தமிழகத்தில் இசுலாமிய மதத்தைப் பரப்பவும், தமிழகத்தை ஆண்டு வந்த பாண்டிய மன்னரிடையே ஒற்றுமையின்மை கருதியும், தமிழகத்தில் உள்ள அளவற்ற செல்வங்களைக் கொள்ளையடித்துச் செல்லவும், தமிழகத்தைக் கைப்பற்றித் தங்கள் ஆட்சியை நிலை நாட்டவும் இசுலாமியர் தமிழகத்தின் மீது படையெடுத்தனர் என்பதைத் தக்க சான்றுகளுடன் அறிந்து கொள்ளலாம்.
- தென்னிந்தியாவை ஆண்டுவந்த இந்து அரசர்கள் இசுலாமியரை வீரத்துடன் போராடி வெற்றி கொண்டதையும், விசயநகரப் பேரரசர்களின் ஆட்சி முகிழ்த்ததையும் அறிந்து கொள்ளலாம்.