Primary tabs
-
5.0 பாட முன்னுரை
பழந்தமிழ் மன்னர்கள் அரசாட்சியின்போது எவ்வாறு ஆட்சியினை மேற்கொண்டனரோ அதே பாதையிலேயே நாயக்க மன்னர்கள் தெலுங்கராய் இருந்தபோதிலும் ஆட்சி புரிந்தனர்.
நாயக்க மன்னர்கள் அதிகாரத்தினைத் தம்மிடம் வைத்துக் கொள்ளாமல் பிரித்து வைத்து ஆட்சி புரிந்தனர்.
சமயக் கொள்கையில் நாயக்க மன்னர்கள் நடுநிலையோடு இருந்து வந்தனர்.
நாயக்க மன்னர்கள் கோயில் வழக்குகளைத் தீர்த்து வைத்தனர். மங்கம்மாள் போன்றோர் சௌராஷ்டிர மக்களுக்கு என ஒரு சாசனத்தை அளித்தனர்.
பல வகையான வரிகளை நாயக்க மன்னர்கள் விதித்தனர்.
இவர்களது ஆட்சிக் காலத்தில் குறிப்பட்ட சில பெண்களைத் தவிர ஏனைய பெண்கள் கல்வி கற்றது போல் தெரியவில்லை.
மேலே கூறப்பட்ட செய்திகளைச் சான்றுகளுடன் இப்பாடத்தில் காணலாம்.