Primary tabs
2.0 பாட முன்னுரை
இந்த நூற்றாண்டில் மடங்களின் ஆதரவில் தோன்றிய புலவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் சிவப்பிரகாசரும் குமரகுருபரரும் ஆவர். இக்காலப் புலவர்கள் எத்தனை புதிய படைப்புகளைப் படைத்தாலும் நீதிநூல் ஒன்றை இயற்றுவதைப் பெரிதும் விரும்பினர். எனவே நீதி இலக்கியமும் செழித்து வளர்ந்தது. சிற்றிலக்கியங்கள், மொழியாக்கப் புராணங்கள், இலக்கண நூல்கள் மற்றும் உரைகளும் தோன்றின. நாயக்க மன்னர்களின் ஆதரவு பெற்ற கிறித்தவர்கள் மிஷினரிகளை நடத்தினர்; தமிழில் நூல்களைப் படைத்தனர். பிற துறைகளில் எழுந்த நூல்களுள் இந்துக்களின் பழக்க வழக்கங்களும் சடங்குகளும் என்ற நூல் முக்கியமானது. ஆனந்தரங்கம் பிள்ளை எழுதிய நாட்குறிப்பு புதிய உரைநடை வடிவைத் துவக்குகின்றது. இவற்றை இனி விரிவாகக் காண்போம்.