Primary tabs
2.4 நாட்குறிப்பு
புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர் ஆண்ட காலத்தில் பிரெஞ்சுக் கவர்னர் டூப்ளே என்பவருக்கு உறுதுணையாகத் திகழ்ந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை. இவருடைய நுண்ணறிவைக் கண்டு பிரெஞ்சுக்காரர்கள் இவரைத் தம் திவானாக அமர்த்திக் கொண்டனர். தமிழ்மொழி தவிரத் தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, போர்ச்சுகீசிய மொழி அறிந்தவர். சோதிடவியலிலும் வான இயலிலும் வல்லவரான இவர், சிறந்த தமிழ்ப் புரவலரும் ஆவார். இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு எனில் அது அவர் தம் கைப்படத் தமிழில் நாள்தோறும் எழுதிவைத்த நாட்குறிப்பே. அவருடைய காலத்தில் யாருமே புரிந்திராத அரியதோர் இலக்கியப் பணியை இதன்மூலம் பிள்ளை செய்துள்ளார். இந்நாட்குறிப்பு பெரும் வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது என வியக்கின்றார் கே.கே. பிள்ளை. பிரெஞ்சுக்காரர்களைப் பற்றிய அரிய செய்திகளைத் தருவதோடு அவர் கையாண்ட எழுத்து நடையே தமிழுலகிற்குப் புதுமையானதாகத் திகழ்கிறது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I