தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0514-இருபதாம் நூற்றாண்டு

  • 2.1 இருபதாம் நூற்றாண்டு

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் மேலை நாட்டுக் கிறித்தவ சமயம் விரைவாகப் பரவியது. மேலை நாட்டினரின் வருகையினால் விளைந்த முக்கியமான மாற்றம் அச்சு இயந்திரங்களின் வரவு ஆகும். மேனாட்டாரின் தொடர்பால் சிறுகதை, புதினம், பத்திரிகைகள், உரைநடை போன்ற பல்வேறு துறைகளில் தமிழ் மொழியிலும் புதுமைகள் புகுந்தன. இதனால் தமிழ்மொழி வரலாற்றிலும் மாற்றம் ஏற்பட்டது. மேனாட்டு அறிஞர்களான பெஸ்கி, ரேனியஸ், கிராப், போப், ஆர்டன், கால்டுவெல் ஆகியோர் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழைப் பற்றி ஆராய்ந்தனர். இவ்வகையில் கால்டுவெல் திராவிட மொழியியலின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

    மேலை நாட்டாரின் வருகையினால் தமிழ் உரைநடை வளர்ச்சி பெற்றது. புதிய புதிய கலைச்சொற்கள், புதிய புதிய இலக்கணக் கூறுகள், புதிய புதிய வாக்கிய அமைப்புக்கள், புதிய சொல்லாக்கங்கள், புதிய துணைவினைச் சொற்கள் போன்றவை தமிழ் மொழியில் தோன்றின. இருபதாம் நூற்றாண்டுத் தமிழைப் பற்றிப் பல்வேறு அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். அவர்களுள் வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், ச.அகத்தியலிங்கம், செ.வை. சண்முகம், பொன்.கோதண்டராமன், மு.சண்முகம் பிள்ளை, கு.பரமசிவம், ஆந்திரனோ போன்றோர் குறிப்பிடத்தக்கோர் ஆவர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:09:30(இந்திய நேரம்)