Primary tabs
-
2.2 ஒலியனியல்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் அமையும் ஒலியன்கள், உயிர் ஒலியன்கள், மூக்கின உயிர்கள், மெய் ஒலியன்கள் ஆகும்.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் மூக்கின உயிர் தோன்றியுள்ளது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஏற்பட்ட மாற்றமாகும். மூக்கொலி உயிர்கள் முன்னரே இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியர் காலத்திலேயே மொழியிறுதி மகர னகர மெய்கள் ஒன்றாகி உள்ளன. எ-டு. மரம் - மரன்; நயன் - நயம். இந்த மகர, னகரப் போலிகள் அவற்றிற்கு முந்திய உயிர்கள் மூக்கொலிச் சாயல் பெற்றதன் விளைவாகத் தோன்றி இருக்கலாம் என்பர். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்.
மரம்-மரmaram>marஏமரன்-மரmaran>marஏஅவன்-அவavan>avEபத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாடகங்களில் சமுதாயத்தின் கீழ்மட்ட மக்களின் பேச்சுமொழி இடம் பெற்றது. இதன் விளைவாக மூக்கின உயிரொலி தனி ஒலியன் ஆனது என்று விளக்குகிறார் தெ.பொ.மீ. இதனைக் குறிக்க அந்த எழுத்தின் மீது ~ இந்தக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
(1)வந்தேன்
வந்தாய்- -வந்தே~
வந்ே~த(2)ஆம்
ஆ- -ஆ~
ஆ (வியப்பிடைச் சொல்)(3)ஊ~-குழந்தையைப் பயமுறுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சொல் அல்லது பேய்க் கதையைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது கேட்டுக் கொண்டிருக்கிறோம். என்பதைக் காட்டப் பயன்படுத்தப்படும் சொல். இதை ‘ஊம்’ கொட்டுதல் என்பர்.(4)ஓ~ ஓ- -ஆம்
வியப்பிடைச் சொல்(5)ஈ ஈ~-ஈ
ஈ யெனச் சிரித்தல்(6)வந்து~ வேலையைச் செய்
வந்து வேலையைச் செய்= =வந்து உன் வேலையைச் செய்
வந்து அந்த வேலையைச் செய்2.2.2 ஒலிப்புடைத் தடையொலிகளும் ஒலிப்பிலாத் தடையொலிகளும்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் ஒலிப்புடை வெடிப்பொலிகள் (Voiced capstops) தனி ஒலியன்களாக வளர்ச்சியுற்றன. இது குறிப்பிடத்தக்க ஒன்று. பிறமொழிச் சொற்கள் வழக்கு மிகுந்ததே இதற்குக் காரணமாகும்.
குரு
kuru
guru
பாவம்
pãvãm
bãvãm
pimple
teacher (கு - ஒலிப்புடை வெடிப்பொலி)
sin
expression (பா - ஒலிப்புடை வெடிப்பொலி)இவ்வாறு ஒலிப்புடை வெடிப்பொலிகளைப் பயன்படுத்துதல் நகர்ப் புறங்களில் வாழ்வோர், கற்றோர் ஆகியோரது பேச்சிலேயே பெரிதும் உள்ளது; கிராமப்புறங்களில் அந்த அளவுக்கு ஆட்சி பெறவில்லை.
2.2.3 ஒலியன்களின் வருகை முறை (Distribution of Phonemes)
உயிரொலியன்களின் வருகை முறையும் மெய்யொலியன்களின் வருகை முறையும் பற்றிப் பார்ப்போம்.
• உயிரொலியன்களின் வருகை முறை
இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் பேச்சில் எல்லா உயிர் எழுத்துகளும் சொல்லின் முதலிலும் இடையிலும் வருகின்றன. சொல்லின் ஈற்றில் எ, ஒ வருதல் இல்லை. ஈ, ஊ ஆகிய இரண்டும் தீ, பூ ஆகிய ஓரசைச் சொற்களில் ஈற்றில் வருகின்றன.
ஈரிதழ் ஒலிக்கு முன்னரும் நாவளை ஒலிக்குப் பின்னரும் வரும்பொழுது எகரம் ஒகரமாகிறது.
பெண்
மிடா>
>பொண்ணு
மெடா>
>
மொடா• மெய்யொலியன்களின் வருகை முறை
க், ச், த், ப், ம், ந், ஞ், வ், ய் ஆகிய மெய்கள் சொல்லின் முதலில் வருகின்றன. ட், ர், ல் ஆகிய மெய்கள் பிறமொழிச் சொற்களில் மொழி முதலில் வருகின்றன.
டப்பா
ரப்பர்
லட்டுபதினெட்டு மெய்களும் மொழியிடையில் தனித்து வருகின்றன.
ம், ன், ண், ழ், ல், ள், ர், ய் ஆகியவை சொல்லின் இறுதியில் வருகின்றன.
இரண்டு உயிர்களுக்கிடையே ப், த், ச், ட், க், ம், ன், ஞ், ண், ல், ள், வ், ய் ஆகிய மெய்கள் தனித்தும் இரட்டித்தும் வரும். இவற்றில் மூக்கொலி, மருங்கொலி, அரையுயிர் ஆகியன குறில் எழுத்தை அடுத்து மட்டுமே வரும். ங், ந் ஆகிய இரண்டும் உயிர்களிடையே தனித்து வரும். ற்ற் சொல்லின் இடையிலும் உயிர்களின் இடையிலும் வரும்.
எழுத்துத் தமிழில், குறிப்பாகப் பத்திரிகைத் தமிழில் க், ச், ட், த், ந், ம், ய், ர், ல், வ், ஸ், ஜ், ஷ் முதலியன சொல்லின் முதலில் இடம் பெறுகின்றன. அந்தச் சொற்கள் மிகுதியும் பிற மொழிச் சொற்கள் ஆகும்.
(ட-t)
(L-d)
(ல)
(ஷ)
(ஜ)
(ஹ)
(க்ஷ)டவல், டானிக், டெலிகிராம்
டப்பா, டாக்டர், டீசல், டெட்டால், டைனமோ
லட்சம், லாகிரி, லீலை, லினன்
ஷர்பத், ஷாப்
ஜம்பம், ஜாக்கிரதை, ஜீன், ஜேப்பு, ஜோடி
ஹால், ஹோட்டல்
க்ஷத்திரியர், க்ஷவரம், க்ஷயரோகம், க்ஷேமம்அவ்வாறே, க், ச், த், ட், ப், ம், ன், ண், ய், ர், ல், வ், ழ், ள் ஜ், ஸ் ஆகியவையும் பிற மொழிச் சொற்களின் மொழியிறுதியில் இடம் பெறுகின்றன.
• மெய்ம்மயக்கம்
இன்றைய தமிழில் ஒரு சொல்லின் முதலிலோ இறுதியிலோ இரண்டு அல்லது மூன்று மெய்கள் மயங்கி வருவது இல்லை. அப்படி வந்தாலும் கடன் வாங்கும் சொற்களில் வருகிறது.
சான்று:
ட்ரை
ட்வென்ட்டி=
=முயற்சி செய்
இருபதுஇன்றைய எழுத்துத் தமிழில் கீழ்க்கண்ட புதிய மெய்ம்மயக்கங்கள் இடம் பெறுகின்றன.
(ட்ன்)
(ட்ல்)
(ட்ஜ்)
(ன்ச்)
(ன்ய்)
(ன்ஜ்)
(ன்ஷ்)
(ஸ்க்)
(ஸ்ட்)
(ஸ்த்)
(ஸ்ப்)
(ஸ்ர்)
(ஸ்ல்)
(ஸ்வ்)
(ர்ண்)
(ர்ன்)
(ர்ர்)
(ர்ஜ்)
(ல்ஷ்)சட்னி
இட்லி
பேட்ஜ்
இன்சூரன்ஸ்
சூன்யம்
இன்ஜின்
பென்ஷன்
நமஸ்காரம்
போஸ்டர்
ஆஸ்தி
பரஸ்பரம்
ஆஸ்ரமம்
இஸ்லாம்
சரஸ்வதி
வர்ணனை
கவர்னர்
குர்ரான்
கர்ஜனை
கால்ஷியம்பழந்தமிழில் தவிர்க்கப்பட்ட மெய்ம்மயக்கங்கள் விரைந்தொலித்தலில் அல்லது கடன் வாங்கப்பட்ட சொற்களில் இடம் பெறுகின்றன.
கட்டில்
திருகு
பண்ணினாய்
பல்லில்>
>
>
>கட்லு
த்ருகு
பண்ணாய்
பல்ல்லமூன்று மெய்கள் மயங்கி வருதலும் உண்டு. விரைந்தொலித்தலால் மெய்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாகி விடுவதுண்டு.