Primary tabs
-
2.3 பேச்சுத் தமிழில் ஒலி மாற்றங்கள்
பேச்சுத் தமிழில் நிகழும் ஒலி மாற்றங்களைக் குறித்துக் கு.பரமசிவம் தமது இக்காலத் தமிழ்மரபு என்ற நூலில் விளக்கியுள்ளார். தெ.பொ. மீயும் தமது தமிழ்மொழி வரலாறு நூலில் வட்டார மொழிகளில் ஏற்பட்டுள்ள மொழி மாற்றங்களைக் குறித்து விளக்குகிறார். இவ்விரு நூல்களிலும் சுட்டப்படும் செய்திகளைத் தொகுத்துக் காண்போம்.
• இகர எகர; உகர ஒகர மாற்றம்
இலை
இடம்
கிடைக்கும்
திரை
உரல்
குடை
முதல்
>
>
>
>
>
>
>எலை
எடம்
கெடைக்கும்
தெரை
ஒரல்
கொடை
மொதல்• இகர எகரங்கள் ஒகரமாதல்
பிறப்பு
பிணம்
பெட்டி
பெண்>
>
>
>பொறப்பு
பொணம்
பொட்டி
பொண்ணு• இகரம் உகரமாதல்
பிட்டு
பிள்ளை>
>புட்டு
புள்ளை• உகரம் இகரமாதல்
புல்லு
புறா>
>பில்லு
பிறா• ஒளகாரத் திரிபு
ஒளகாரம் ‘அவ்’ என்றே உச்சரிக்கவும் எழுதவும் படுகிறது.
ஒளவை > அவ்வை
2.3.2 ஓரினமாதல் (Assimilation)
ஓர் ஒலியனுக்கு முன்னரோ பின்னரோ வருகின்ற மற்றொரு ஒலியன் முந்திய அல்லது பிந்திய ஒலியனின் உச்சரிப்புக்கு ஏற்ப மாறி வருகின்ற மாற்றம் ஓரினமாதல் எனப்படும்.
வேள்வி, கத்தி என்ற சொற்களின் இறுதியில் உள்ள இகரத்திற்கேற்ப இச்சொற்களோடு இணையும் ‘கு’ என்ற வேற்றுமை உருபில் உள்ள உகரம் இகரமாக மாறுகிறது.
வேள்விக்கு
கத்திக்கு>
>வேள்விக்கி
கத்திக்கிஇவ்வாறே, ண், ன் ஆகிய ஒலிகள் அடுத்து வரும் ப, ச ஆகிய ஒலிகளுக்கேற்ப அவற்றிற்கு இனமான ம், ஞ் என்ற மூக்கொலிகளாக முறையே மாற்றம் பெறுகின்றன.
செண்பகம்
வன்சினம்
எண்பது
நன்செய்
புன்செய்
>
>
>
>
>செம்பகம்
வஞ்சினம்
எம்பது
நஞ்செய்
புஞ்செய்கோயமுத்தூர், சேலம் மாவட்டங்களாகிய கொங்கு நாட்டுப் பகுதியில் ழ > ள ஆகிறது ; ளகரம் ழகரமாகவும் மாற்றம் பெறுகிறது.
நாழி
உழக்கு
கோழி
வாழை
வழி
மூழை
>
>
>
>
>
>நாளி
உளக்கு
கோளி
வாளை
வளி
மூளை• ள் > ழ் ஆதல்
விளக்கு
பளிங்கு
தளிகை
இளமை
>
>
>
>விழக்கு
பழிங்கு
தழிகை
இழமை• ற் > ச் ஆதல்
சோழநாட்டுப் பகுதியில் நுனியண்ணத் தடையொலியும் இடையண்ணத் தடையொலியும் மயங்கி வருகின்றன.
வெற்றிலை
முற்றிலை
கற்றை
>
>
>வெச்சிலை
முச்சிலை
கச்சைவீரசோழிய ஆசிரியர் வட்டாரம் எதனையும் குறிப்பிட்டுக் கூறாமல் தாம் இழிந்தவை எனக் கருதும் வழக்குகளாகக் குறிப்பிடுபவை பின்வருமாறு:
இவனைப் பார்க்க>இவனைப் பாக்கஇங்கு
அங்கு
>
>இங்காக்க
அங்காக்க‘ஆக்க’ என்ற அசைநிலை சேர்க்கப்பட்டுள்ளது.சேற்று நிலம்
ஆற்றுக் கால்>
>சேத்து நிலம்
ஆத்துக்கால்ற்ற் > த்த்இப்படிக் கொத்த
அப்படிக் கொத்த>
>இப்படிக்
கொற்ற
அப்படிக்
கொற்றத்த் > ற்ற்இன்றைய தமிழில் மேலும் சில இழி வழக்குகள் காணப்படுகின்றன.
• ழ் > ய் ஆதல்
வாழைப்பழம்
கோழி முட்டை>
>வாயப்பயம்
கோயி முட்டை• ய் > ச் ஆதல்
உயிர்
மயிர்>
>உசிர்
மசிர்2.3.5 வட்டாரக் கிளை மொழிகளில் ஒலி மாற்றங்கள்
இருக்கிறது அல்லது இருக்குது என்ற வடிவங்களுக்குப் பதிலாக இசுலாமியச் செல்வாக்கால் வட ஆர்க்காட்டில், குறிப்பாக வேலூரில் கீது என்ற வடிவம் வழக்கில் உள்ளது. பழைய ழகர மெய்யின் பல்வேறு மாற்றங்கள் தமிழின் மாறுபட்ட கிளை மொழிகளின் சிறப்பியல்புகளாக உள்ளன. சென்னைத் தமிழில் ழகர மெய் யகர மெய்யாகிறது.
பழம் > பயம்
வட ஆர்க்காட்டுத் தமிழில் ழ > ச ஆகிறது.
இழு > இசு
சிதம்பரத் தமிழில் ழ > ஷ ஆகிறது.
திருவிழா > திருவிஷா
தென்மாவட்டங்களில் ழ > ள ஆவதைக் காணலாம்.
பழம் > பளம்
‘அவர்கள்’ என்ற சொல் பிராமணத் தமிழில் அவா அல்லது அவாள் எனவும், வடஆர்க்காட்டுத் தமிழில் அவுங்க எனவும், நெல்லை மாவட்டத் தமிழில் அவிய எனவும் வழங்குகிறது. S > J ஆவது மதுரைத் தமிழின் சிறப்புக் கூறு ஆகும்.
Saman > Jaman (சாமான் > ஜாமான்)
தென் தஞ்சைத் தமிழில் ‘எண்பது’ என்ற சொல் ‘எண்பளது’ என்று ஆகி ‘எம்பளது’ என்று மாற்றம் பெறுகிறது.
• அண்ண இனமாதல்
அண்ண ஒலிகளாகிய பிற ஒலிகள் ச, ஞ என்று மாற்றம் பெறுவதை அண்ண இனமாதல் எனலாம்.
அடித்தான்
கலைத்தான்
எரிந்தது
உடைந்தது
>
>
>
>அடிச்சான்
கலைச்சான்
எரிஞ்சது
உடைஞ்சது• பல்லொலியாதல்
நுனிநா நுனியண்ணத் தடையொலி (ற்) இரட்டித்து வரும்போது பேச்சுத் தமிழில் இரட்டித்த தகரமாகிறது.
குற்றம்
விற்றாங்க
பற்று வரவு
>
>
>குத்தம்
வித்தாங்க
பத்து வரவு• ந > ன ஆதல்
நுனிநாப் பல் மூக்கொலியாகிய நகரம் நுனியண்ண மூக்கொலியாகிய னகரமாக உச்சரிக்கப்படுகிறது.
இந்நாடு
முந்நீர்
முந்நூறு
>
>
>இன்னாடு
முன்னீர்
முன்னூறு• ழகர மெய் மறைதல்
பேச்சுவழக்கில் ழகர மெய் மறைதலை இக்காலத் தமிழில் காண முடிகிறது.
வாழ்வரசி
தாழ்வாரம்>
>வாவரசி
தாவாரம்• நாவளை ஒலியாதல்
ன்ற் > ண்ண் என்று மாற்றம் பெறுகிறது.
கன்று
ஒன்று>
>கண்ணு
ஒண்ணு• யகர, ரகரம் கெடல்
ஆராய்ச்சி
காய்ச்சி
பார்த்து>
>
>ஆராச்சி
காச்சி
பாத்துமேற்குறிப்பிட்ட ஒலி மாற்றங்கள் குறிப்பிடத் தக்கவையாக இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் விளங்குகின்றன.