Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4. நல்லதங்காள் எதற்காக அண்ணன் வீடு செல்கின்றாள்?
நல்லதங்காளின் கணவனான காசிராசன் நாடு மழையில்லாத காரணத்தால் ஏற்பட்ட பஞ்சத்தால் வாடியது. அதனால் வறுமைக்கு ஆளான நல்லதங்காள், அண்ணன் வீட்டிற்குச் சென்றால் வறுமையில் வாடிக்கிடக்கும் தன் மக்களுக்கு நல்ல உணவை வழங்கிடலாம் என்று முடிவு செய்து கணவன் சொல்லியும் கேளாமல் அண்ணன் வீட்டிற்குச் செல்கிறாள்.