Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4. புராணக் கதைப்பாடல் வழி அறியலாகும் வாழ்வியல் கூறு ஒன்றினைக் குறிப்பிடுக.
வாழ்வியல் கூறுகளுள் ஒன்று குழந்தைப் பிறப்பாகும். இதை அறிவுறுத்தும் நோக்குடனும் கதையை நீண்ட நேரம் இழுத்துச் செல்ல உதவும் என்ற நோக்குடனும் கதைப்பாடலில் கையாளுகின்றனர். அறவாழ்வு வாழ்வோருக்கே குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்று கூறுவதும் குழந்தைப் பேறு பெற என்னென்ன தவம் மற்றும் விரதம் மேற்கொள்வது என்று கூறுவதும் இதனை உறுதிப்படுத்தும். இதனைக் கூறாமல் சுருக்கமாகக் குழந்தை வேண்டித் தவமிருந்தனர் எனச் சொல்லிச் செல்லலாம். அவ்வாறு சொல்லிச் சென்றால் மக்களுக்குக் குழந்தைச் செல்வம் குறித்து அறிவுறுத்த இயலாது. ஆகவே விளக்கமாகக் கூறிக் குழந்தைப் பிறப்பு அரியதொரு காரியம் என்று மக்களை நம்ப வைக்கின்ற மிகப் பெரிய ஊடகமாகக் (Medium) கதைப்பாடல் விளங்குகின்றது.