Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
3. நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு எவ்வாறு தோன்றியது?
சமுதாய மற்றும் சாதிக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் அந்தச் சமுதாயத்தினராலோ அல்லது சாதியினராலோ கொல்லப்படுகின்றனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அரிய செயல் ஆற்றியவர்கள், வீர மரணம் அடைந்தோர் ஆகியோர் இறைவனிடம் வரம் வாங்கி அரிய ஆற்றலுடன் உலகுக்கு வருவதாக நாட்டுப்புற மக்கள் நம்பினர். இந்த முறையில் அச்சவுணர்வு காரணமாகவோ இரக்கம் மற்றும் நன்றியுணர்வு காரணமாகவோ சிலரைத் தெய்வங்களாக்கி விழாக்கள் நடத்திப் பலியும் கொடுத்து வழிபடலாயினர். அவ்வாறு உருவான தெய்வங்களே முத்துப்பட்டன், மதுரை வீரன், சேர்வைக்காரன், வன்னியடி மறவன், தோட்டுக்காரி, பூலங்கொண்டாள் முதலானோர். நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு இவ்வாறே தோன்றியது.