Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
5. மன்னர்களிடையேயும் சமுதாய ஏற்றத்தாழ்வு மனப்பான்மை நிலவியது என்பதற்குச் சான்று தருக.
தோட்டுக்காரி அம்மன் கதையில் கொந்தளப்பூ ராசனுக்கும் கோனாண்டி ராசனுக்கும் சமுதாய ஏற்றத் தாழ்வு காரணமாகப் போர் நடக்கின்றது. அதேபோல் கன்னடியன் படைப்போர் கதையில் குலசேகர பாண்டியனுக்கும் கன்னடியனுக்கும் சண்டை நடக்கின்றது. சமுதாய ஏற்றத் தாழ்வு மக்களை மட்டுமல்ல மன்னர்களையும் பாதித்ததை இக்கதைப் பாடல்கள் மூலம் அறிய முடிகின்றது.