Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
3. நிமித்தங்கள் அல்லது சகுனங்கள் கதைப்பாடல்களில் எடுத்தாளப்படுவதன் நோக்கம் என்ன?
தமிழ் சமுதாய மக்கள் தங்கள் வாழ்வின் ஓர் இயல்பாகச் சகுனங்களைக் கொண்டவர்கள். நிமித்தங்கள் பின் நிகழ்வுகளை முன்னதாகச் சுட்டும் குறிப்புகள் என மக்கள் நம்பினர். அந்த அடிப்படையிலேயே கதை மாந்தர்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை, தீமையை முன் கூட்டியே கதைகேட்போர் தெரிந்து கொள்ள உதவும் உத்தியாகக் கதைப் பாடல்களில் கையாண்டுள்ளனர். இந்த உத்தியைப் பயன்படுத்துவதன் மூலம் கதைத்தலைவர்கள் அடையவிருக்கும் அவல முடிவை மக்கள் முன் கூட்டியே அறிந்து அதைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவ நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.