Primary tabs
-
5.7 தொகுப்புரை
மானுட வாழ்க்கை ஆடிப்பாடி மகிழ்ந்து இன்புறத் தக்கது என்ற வாழ்க்கைத் தத்துவத்தைத் தன்னுள் கொண்டு விளங்கும் நாட்டுப்புற விளையாட்டுகளைப் பற்றி விரிவாக அறிந்தோம். இப்படிப்பட்ட ஒரு மரபு நம்மிடம் இருக்கிறதா என்று கண்டு வியந்தோம். இளையவர், பெரியவர், ஆடவர், மகளிர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் தம்பால் ஈர்த்து அரவணைத்து வளமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு விளையாட்டுகள் தூண்டுகோலாய் விளங்கி வருகின்றன என்பதையும் அறிந்தோம்.
பண்பாட்டுச் செயல்பாடாய், நாட்டுப்புற மரபில் செழித்து வளர்ந்து, மக்களை மகி்ழ்வித்து, அனைவரையும் ஒன்றிணைத்து, மனித நேயத்தை வளர்த்துவரும் நமது பண்பாட்டு மரபை நாமும் வளர்த்தெடுக்க வேண்டாமா? விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் அவற்றைப் பாதுகாத்து வருங்காலச் சந்ததிகளுக்கு நாம் வாரிக் கொடுப்போம் ; வளம் சேர்ப்போம்.