தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாரதியாரும் இந்திய விடுதலை இயக்கமும்

 • பாடம் - 2

  C01122  பாரதியாரும் இந்திய விடுதலை இயக்கமும்

   

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
   

  ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவை மீட்க மேற்கொண்ட முயற்சி, மிதவாத, தீவிரவாத இயக்கங்களின் தோற்றம், பாரதியார் விடுதலை இயக்கத்திற்கு ஆற்றிய அரும்பணி, பாரதி காட்டும் பெண்உரிமைகள், குழந்தை மணத்தையும் பொருந்தாமணத்தையும் வெறுத்துக் காதல் மணத்தை வரவேற்றது, தீண்டாமையை நீக்கிச் சாதிவிடுதலை பெறப்பாடியது, அறிவைத்தெய்வமாகக் குறிப்பிட்டது, அடிமை மோகத்தை நீக்கி அஞ்சாமல் ஒற்றுமையுடன் போராடினால் அந்நியரிடமிருந்து விடுதலை பெறலாம் என்று வழிகாட்டியது என்பனவற்றை இந்தப் பாடம் எடுத்துக் காட்டுகின்றது.
  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  •  
  இந்திய விடுதலை இயக்கங்களில் ஈடுபாடு கொண்ட பாரதியின் அரசியல் வாழ்வை விவரிக்க முடியும்.
  •  

  விடுதலைபெற அறப்போர் தான் சிறந்தது என்று பாரதி மிதவாதியாக மாறியதை விளக்க இயலும்.

  •  

  பெண்கள் விடுதலை பெறப் பெண் உரிமை வேண்டும், என்ற பாரதியின் வாதப்பொருளை எடுத்துரைக்க இயலும்.

  •  

  சாதி சமய உணர்வுகளிலிருந்து விடுபட்டால்தான் அரசியல் விடுதலை கிடைக்கும் என்ற பாரதியின் கோட்பாட்டை அவர் பாடல்களின் வழி விளக்க இயலும்.

   

  •  

  அஞ்சாத நெஞ்சுடன் ஒன்றுபட்டு நின்று போராடினால் வெற்றி உறுதி என்ற பாரதியின் நிலையினை அவர் பாடல்களின் துணையுடன் சுட்டிக்காட்ட இயலும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:39:38(இந்திய நேரம்)