தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

2:0-பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    தமிழ் இலக்கிய வரலாற்றின் தொடக்க கால இலக்கியங்களைச் சங்க இலக்கியம் என்று அழைக்கிறோம். சங்க இலக்கியப் பாடல்கள் காதல், போர் முதலியவற்றைத் தெரிவிக்கின்றன. இந்த இலக்கியத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்களின் பாடுபொருள் பற்றிக் கூறுவதே பொருள் இலக்கணம் ஆகும். பொருள் இலக்கணம் என்பது இலக்கியத்தின் பாடுபொருள் பற்றிக் கூறும் இலக்கணம் ஆகும். பாடல்கள் எழுதப்படும் யாப்புப் பற்றிக் கூறுவது யாப்பு இலக்கணம் ஆகும். செய்யுள்களில் அமையும் அழகுகளைப் பற்றிக் கூறுவது அணி இலக்கணம் ஆகும்.  உலா, தூது முதலிய இலக்கிய வடிவங்களைக் கூறுவது பாட்டியல் இலக்கணம் ஆகும். இவற்றைப் பற்றி இந்தப் பாடத்தில் சுருக்கமாகக் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:40:31(இந்திய நேரம்)