தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3:2-எழுத்துச் சாரியை

 • 3.2 எழுத்துச் சாரியை

  எழுத்துகளை ஒலிக்கும்போது, அ, ப் என்று ஒலிக்கிறோம். எழுத்துகளை ஒலிக்கும்போது தனியே எழுத்தை மட்டும் ஒலிக்காமல், அகரம், இகரம் என்று ஒலிப்பதும் உண்டு. கரம் என்று சேர்த்துச் சொல்வதால், எழுத்துகளை எளிதாக ஒலிப்பதற்கு ஏதுவாக இருக்கும். எழுத்துகளை எளிதாக ஒலிக்கப் பயன்படும் இவற்றை எழுத்துச் சாரியை என்று வழங்குவர்.

  மெய் எழுத்துகளைத் தனியாக ஒலிப்பது கடினம். எனவே அவற்றை என்ற உயிர் எழுத்துடன் சேர்த்தே சொல்லுவர். இலக்கணத்தில், க என்று கூறப்படும் எழுத்து க் என்ற மெய் எழுத்தையே குறிக்கும், கரம் என்பதைப் போலவே காரம், கான் ஆகியவையும் எழுத்துச் சாரியைகளாக வரும். கீழ்வரும் எடுத்துக்காட்டுகளைக் கவனிக்க.

  கரம், கரம், காரம், காரம், ஃகான், ஃகான் காரம், யாகாரம் கான், ஒளகான் க. ச. த. ப

  இவற்றை நோக்குங்கள். இவற்றில் கரம், காரம், கான் ஆகிய சாரியைகள் வந்துள்ளன, மெய் எழுத்துகள் அ சாரியை பெறும் என ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது. எழுத்துச் சாரியைகளைக் கீழ்க்காணுமாறு காட்டலாம்.

  குறில் எழுத்துகள்
  -
  கரம், காரம், கான்
  நெடில் எழுத்துகள்
  -
  காரம்
  ஐ, ஒள,
  -
  கான்
  மெய் எழுத்துகள்
  -

  குறில் எழுத்துகள் கான் சாரியை பெற்று வரும்போது, அதற்குமுன் ஆய்த எழுத்து வரும்,

  எடுத்துக்காட்டாக,  மஃகான், லஃகான், வஃகான் என்று வரும்.

  மெய்கள் அகரமும் நெட்டுயிர் காரமும்
  ஐ, ஒள, கானும், இருமைக் குறில் இவ்
  இரண்டொடு காரமும் ஆம் சாரியை பெறும் பிற

  (நன்னூல் 126)

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 11:19:33(இந்திய நேரம்)