தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3:5-தொகுப்புரை

 • 3.5 தொகுப்புரை

  தமிழ் எழுத்துகளின் வகைகளை இந்தப் பாடம் எடுத்துரைத்துள்ளது. குறில் நெடில் என்னும் உயிர் எழுத்தின் வகைகளும், வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் மெய் எழுத்தின் வகைகளும் விளக்கப் பட்டுள்ளன. இன எழுத்துகள் எவையெல்லாம் என்பதையும் சுட்டு எழுத்துகளையும் வினா எழுத்துகளையும் இந்தப் பாடம் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ் எழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் உரிய மாத்திரையையும் மாத்திரை என்றால் என்ன என்பதையும் இந்தப் பாடம் விளக்கியுள்ளது. போலி என்றால் என்ன என்பதைப் பற்றியும் போலியின் வகைகளையும் எடுத்துரைத்துள்ளது.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - II
  1.

  சுட்டு எழுத்துகள் யாவை?

  2.

  அகச்சுட்டு, புறச்சுட்டு விளக்கம் தருக.

  3.

  வினா எழுத்துகளைக் குறிப்பிடுக.

  4.

  மாத்திரை என்றால் என்ன?

  5.

  குறில், நெடில், மெய் எழுத்துகளுக்கு உரிய மாத்திரையைக் கூறுக.

  6.

  போலி என்றால் என்ன?

  7.

  போலியின் வகைகளை எடுத்துக்காட்டுடன் தருக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 12:30:05(இந்திய நேரம்)