தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - C02122-பிறப்பு முயற்சி வேறுபாடும் உயிர் எழுத்துகளின் வகைப்பாடும்

  • 2.3. பிறப்பு முயற்சி வேறுபாடும் உயிரெழுத்துகளின் வகைப்பாடும்

    பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் கழுத்தில் இருந்து தோன்றுகின்றன. ஆனால் இந்த உயிர்எழுத்துகள் அனைத்தும் ஒரே முயற்சியினால் வெளிப்படுவது இல்லை. உயிர்எழுத்துகள் ஒரே இடத்தில் இருந்து பிறக்கின்றன. ஆனால் ஒரே முயற்சியினால் பிறப்பதில்லை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.

    பன்னிரண்டு உயிர்எழுத்துகள் மூன்று விதமான முயற்சியினால் பிறக்கின்றன. அந்த முயற்சி வேறுபாட்டின் அடிப்படையில் உயிர்எழுத்துகளைப் பிரித்துக் காண்போம்.

    அவை,

    (1)
    அ, ஆ எழுத்துகளின் பிறப்பு
    (2)
    இ, ஈ, எ, ஏ, ஐ எழுத்துகளின் பிறப்பு
    (3)
    உ, ஊ, ஒ, ஓ, ஒள எழுத்துகளின் பிறப்பு

    ஆகியன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:23:31(இந்திய நேரம்)