Primary tabs
- 6)
எழுத்துப் பிறப்பிற்குத் தெரிவிக்கப்படும் புறனடையை விளக்குக.
எழுத்துப் பிறப்பிற்குப் பொதுவாகச் சொல்லப்பட்ட இலக்கணம் சில வேளைகளில் சிறு மாற்றங்களைப் பெறுவது உண்டு. அந்த மாற்றங்களைப் பற்றிக் கூறுவதே புறனடை. சில எழுத்துகளை உயர்த்தியோ, தாழ்த்தியோ அல்லது நடுத்தரமாகவோ உச்சரிக்கும் போது சிறு மாறுதல்களோடு அவை பிறக்கின்றன என்னும் புறனடைக் கருத்தை நன்னூல் தெரிவிக்கிறது.