தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 7)

    மெய்யொலிகளின் பிறப்புக் குறித்துத் தமிழ் இலக்கண நூல்களும் மொழியியல் அறிஞர்களும் தெரிவிக்கும் கருத்துகளை ஒப்பிடுக.

    தமிழ் இலக்கண நூல்கள் மெய்யொலிகளின் பிறப்புக் குறித்து விளக்குகையில் முதலில் அவற்றின் பிறப்பிடத்தை மூன்றாகப் பகுத்துள்ளன. அவை,

    வல்லினம்
    - நெஞ்சு / தலை
    மெல்லினம்
    - மூக்கு
    இடையினம்
    - கழுத்து.

    அடுத்த நிலையில் அந்தந்த மெய்கள் தோன்றுவதற்குச் செயல்படும் உறுப்புகளின் முயற்சியை விளக்குகின்றன.

    மொழியியல் அறிஞர்களும் முதலில் மெய்யொலிகள் பிறக்கும் இடத்தை வைத்து அவற்றை மூக்கு ஒலிகள் என்பது போலப் பகுத்துக் கொள்கின்றனர். மொழிநூல் அறிஞர்களும் ஒரு மெய்யொலி பிறப்பதற்கு ஒத்துழைக்கும் உறுப்பின் பெயரை அந்த மெய்யொலிக்கு இட்டு அழைக்கின்றனர்.

    எடுத்துக்காட்டு : ‘ம்’ - இதழொலி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 10:14:52(இந்திய நேரம்)