தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஊகார ஈற்றுச் சிறப்பு விதி

  • 4.5 ஊகார ஈற்றுச் சிறப்பு விதி

    பூ என்னும் ஓர் எழுத்துப் பெயர்ச்சொல்லின் முன்னர் வல்லினம் வந்தால், அவ்வல்லினம் பொதுவிதிப்படி மிகுதலே அல்லாமல், அவ்வல்லினத்துக்கு இனமான மெல்லினமும் மிகும்.

    பூப்பெயர் முன்இன மென்மையும் தோன்றும்  (நன்னூல், 200)

    சான்று :

    பூ + கொடி = பூங்கொடி
    பூ + சோலை = பூஞ்சோலை
    பூ + தடம் = பூந்தடம்
    பூ + பொழில் = பூம்பொழில்

    பொதுவிதிப்படி பூ முன்னர் வரும் வல்லினம் மிகும்.

    சான்று :

    பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்
    பூ + கடை = பூக்கடை
    பூ + கூடை = பூக்கூடை

புதுப்பிக்கபட்ட நாள் : 16-08-2017 14:24:05(இந்திய நேரம்)