Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
3. மார்க்கோபோலோ தமிழ் மக்களின் பழக்கங்களில் எவற்றை முக்கியமானவையாகக் குறிக்கிறார்?
பாண்டி நாட்டு மக்கள் நாள்தோறும் இருமுறை குளித்தனர். குளிக்காதவர்களைத் தூய்மைக் குறைவாகக் கருதினர்.
தண்ணீரை உதட்டுக்கு மேலே தூக்கிப் பருகினர்.
வலது கையால் சாப்பிட்டனர்.
மன்னராயினும் தரையில் உட்கார்ந்து பேசுவதைக் குறைவாகக் கருதவில்லை.
மார்க்கோபோலோ மேற்கண்டவற்றைத் தமிழ் மக்களின் முக்கியமான பண்பாடுகளாகக் குறிக்கின்றார்.
