தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.0 பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை

    மூவாயிரம் ஆண்டுகள்... காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. “போனால் வராது பொழுது விடிந்தால் கிடைக்காது" என்று சந்தையில் கூவுகிறானே! அது கத்தரிக்காய் புடலங்காய்க்குப் பொருந்துகிறதோ இல்லையோ காலத்துக்குப் பொருந்தும். காலம் போனால் வருமா? இன்று என்பது கழிந்து நேற்றாகி விடுகிறது. பொழுது விடிந்தபின் 'நேற்று' இறந்து விடுகிறது. இனிமேல் நம் வாழ்நாளில் கழிந்து போன அந்த நாள் வருமா?

    இல்லை, நிகழ்கின்ற காலத்தைத்தான் நிறுத்த முடியுமா? அது முடியாத மாயவேலை. காலம் எத்தனைச் சுவடுகளை, தழும்புகளைப் பூமியின் மேனியில் ஏற்படுத்தி இருக்கிறது? சங்க காலக் கோயில்கள், கோட்டைகள், கொத்தளங்கள் எங்கே? இருந்ததற்கான சுவடுகளே இல்லை! கச்சியும் (காஞ்சிபுரம்) கடல் மல்லையும் (மகாபலிபுரம்) பல்லவர் நினைவாகக் காட்சி தருகின்றன. தஞ்சைக் கோயிலும் பிற கோயில்களும் சோழர் நினைவாக, மாமதுரைப் பெருநகரம் பாண்டியர் நினைவாக இன்றும் பார்க்கிறோம். சேர நாட்டின் சுவடுகளைக் காணோம். இடிந்து சிதைந்து கிடக்கும் பல கோயில்கள், கோட்டைகள் நம் பழம்பண்பாட்டின் உருவங்கள் இல்லையா?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:07:53(இந்திய நேரம்)