தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.7 தொகுப்புரை

  • 6.7 தொகுப்புரை

    தமிழ் நெஞ்சங்களே! சான்றோர்களே! இரண்டாயிரம் ஆண்டுக் காலத் தமிழர் பண்பாட்டை இங்கே கண்டீர்கள். காலம் அழிந்தாலும், வானும் நதியும் மாறினாலும், தமிழனின் பண்பாட்டுக் கூறுகள் சில மாறாமல் நிலைபேறு உடையனவாய்த் திகழ்கின்றன. மனித நல்லிணக்கமும், உயிரிரக்கமும், உடன்பிறப்புப் பண்பும், மாசற்ற தூய உள்ளமும், உயிரோடு பிணைந்த காதலும், எந்த நிலையிலும் உடையாத குடும்ப உறவும் அப்பண்பாட்டின் நிலைபேற்றுக்கு வழிவகுத்தவை எனலாம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1. தமிழர் பண்பாட்டில் கழிந்துவிட்ட கூறுகளில் இரண்டைக் கூறுக.

    2. தமிழர் பண்பாட்டின் வீழ்ச்சிக்குரிய மூன்று ஆசைகள் எவை?

    3. தமிழர் பண்பாட்டில் புதிதாக வந்த ஆக்கங்களில் இரண்டைக் கூறுக.

    4. பண்பாட்டில் ஏற்பட்ட மாபெரும் இழப்பு எது?

    5. அஃறிணை உயிர்களிடம் தமிழன் காட்டும் அன்புக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-08-2017 13:55:36(இந்திய நேரம்)