Primary tabs
பாடம் - 2
D01122 ஐங்குறுநூறு - 2
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் ஐங்குறுநூற்றில் இடம் பெற்றுள்ள அகத்திணைக் கொள்கைகள் சிலவற்றைப் பற்றிக் கூறுகிறது. ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள முப்பொருள்கள், உள்ளுறை, இறைச்சி, ஏனை உவமம் ஆகியவை பற்றி விளக்கி உள்ளது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இப்பாடத்தைப் படித்து முடித்தால் நீங்கள் கீழ்க்காணும் பயன்களைப் பெறலாம்.
- முதல், கரு, உரிப்பொருள்கள் என்பவை பற்றி அறியலாம்.
- ஐங்குறுநூற்றில் இடம் பெற்றுள்ள முப்பொருள்களை அவ்வத் திணை வழியே அடையாளம் காணலாம்.
- திணை மயக்கம் பற்றி அறியலாம்.
- உள்ளுறை உவமைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
- இறைச்சி பற்றி அறியலாம்.
- ஏனை உவமம் அமைந்துள்ள விதத்தை விளங்கிக் கொள்ளலாம்,