தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--களவிற்குரிய கிளவித்தொகை

  • 4.3
    களவிற்கு உரிய கிளவித்தொகை

    களவு என்னும் மறைமுகக் காதல் ஒழுக்கத்தை விரிவாக விளக்கும் இயல் களவியல் ஆகும். அவ்வியலில் இடம்பெறும் செய்திகளை ஒருங்கு தொகுத்து ஒரு நூற்பாவில் உணர்த்தியுள்ளார் நாற்கவிராசநம்பி. அதுவே “களவிற்கு உரிய கிளவித்தொகை” எனப்படுகிறது. (கிளவி - கூற்று) அந்நூற்பாவில் பதினேழு வகைப்பட்ட கிளவிகளைக் குறிப்பிட்டுள்ளார். அவையாவன:

    1. இயற்கைப்புணர்ச்சி
    2. வன்புறை
    3. தெளிவு
    4. பிரிவுழி மகிழ்ச்சி
    5. பிரிவுழிக் கலங்கல்
    6. இடந்தலைப்பாடு
    7. பாங்கன் கூட்டம்
    8. பாங்கிமதி உடம்பாடு
    9. பாங்கியிற் கூட்டம்
    10. பகற்குறி
    11. பகற்குறி இடையீடு
    12. இரவுக்குறி
    13. இரவுக்குறி இடையீடு
    14. வரைதல் வேட்கை
    15. வரைவு கடாதல்
    16. ஒருவழித் தணத்தல்
    17. வரைவு இடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்

    குறிப்பு: இப்பாடப்பகுதியில் இயற்கைப் புணர்ச்சி முதலாகப் பாங்கன் கூட்டம் வரை உள்ள ஏழு கிளவிகளுக்கான விளக்கங்கள் இடம் பெறுகின்றன. அடுத்தடுத்த பாடங்களில் மற்றையவை இடம் பெறுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:50:41(இந்திய நேரம்)