தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

வன்புறையும் தெளிவும்

  • 4.5
    வன்புறையும் தெளிவும்

    வன்புறை களவுக்குரிய கிளவித் தொகைகளுள் ஒன்று.

    வன்பு - வலிமை ; உறை - உறுத்தல், வற்புறுத்திக் கூறுதல்.

    தலைவி ஐயுற்றவழித் தலைவன் அவளது ஐயம் தீர உண்மையை வற்புறுத்திக் கூறுதல் வன்புறை எனப்படும்.

    வன்புறை இருவகைப்படும். அவையாவன:

    1. ஐயம் தீர்த்தல்
    2. பிரிவு அறிவுறுத்தல்
    • ஐயம் தீர்த்தல்

    தலைவிக்கு உண்டான ஐயத்தைத் தலைவன் தீர்த்து வைத்தல் ஐயம் தீர்த்தல் எனப்படும். இது,

    1. கலைந்துபோன தன் அணிகலனைச் சரிசெய்து தலைவன் அணிவிக்க அது மாறுபட்டுள்ளதைக் கண்டு தோழி ஐயுறுவாள் என்று கருதிய தலைவியின் ஐயம் தீர்த்தல்.
    2. மீளவும் வருவேன் என்று, தான் கொண்டுள்ள அளவுக்கதிகமான காதலைக் கூறித் தலைவன் ஐயம் தீர்த்தல்.
    3. ‘விதி நம்மைப் பிரிக்காது’ என ஊழின் வலிமையைக் கூறித் தலைவியின் ஐயம் தீர்த்தல்.

    என மூன்று உட்பிரிவுகளை உடையது.

    • பிரிவு அறிவுறுத்தல்

    தலைவன் தன் பிரிவைத் தலைவிக்குத் தெரிவித்தல் பிரிவு அறிவுறுத்தல் எனப்படும். இது வன்புறையின் இரண்டாம் வகை. இது,

    1. பிரியமாட்டேன் எனல்.
    2. பிரிந்து மறுபடியும் திரும்பி வருவேன் எனல்.
    3. தான் பிரிந்து செல்லும் இடம் அருகில்தான் உள்ளது எனல்.

    என மூன்று உட்பிரிவுகளை உடையது.

    இது களவிற்குரிய கிளவித்தொகைகளுள் ஒன்று. தலைவன் தனது நிலைப்பாட்டை வற்புறுத்தி உரைப்பது வன்புறை என்று கண்டோம். அந்த வன்புறை வார்த்தைகளை ஏற்று, ‘தலைவன் சொல்வது உண்மையானதுதான்; ஏற்புடையதுதான்’ என்று தெளிந்து தலைவி ஆற்றியிருப்பது தெளிவு எனப்படும்.

    தலைவன் மாற்றம் தலைவி தேற்றம்
    தெளிவாம் என்பர் (13)

    என்பது இலக்கண நூற்பா.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-11-2017 15:48:32(இந்திய நேரம்)