தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொடையும் தொடை விகற்பமும் (எண்ணிக்கை)

  • 6.3 தொடையும் தொடை விகற்பமும் (எண்ணிக்கை)

    தொடைகள் மொத்தம் எட்டு. விகற்பம் பெறும் தொடைகள், ஐந்து. தொடை விகற்பங்கள் ஏழு. இவை இரண்டும் உறழ ஐந்து X ஏழு - முப்பந்தைந்து தொடைகள். எனவே, தொடையும் தொடை விகற்பங்களும் மொத்தமாக நாற்பத்தி மூன்று என்ற எண்ணிக்கையாம்.

    விகற்பம் பெறும் தொடைகள்
    :  5
    விகற்பமிலாத் தொடைகள்
    :  3
     
     
     
    ___
    ஆக மொத்தத் தொடைகள் மட்டும்
    :  8
     
    ___
     
     
    விகற்பம் உடைய தொடைகள்
     
     
     
    (5) ஐந்தும், தொடை விகற்பம் (7)
    உறழ (பெருக்க) 5X7 =
    விகற்பங்கள் மொத்தம் 3
     
     
     
     
    ___
    ஆக, தொடையும் விகற்பமும்
    43
     
    ___

    6.3.1 தொடைக்கும் தொடை விகற்பத்துக்கும் இடையே அமையும் வேற்றுமைகள்

    1. தொடையென்பது செய்யுளில் அடிதோறும் பார்க்கப்படுகிறது. தொடை விகற்பம் என்பது அடிகளில் அமைந்துள்ள சீர்கள் தோறும் பார்க்கப்படுவது.

    2. தொடை, செய்யுளின் மேலிருந்து கீழ்நோக்கிப் பார்க்கப்படுவது. தொடை விகற்பம் என்பது இடமிருந்து வலமாகப் பார்க்கப்படுவது.

    குறிப்பு:

    தொடை விகற்பம், இடமிருந்து வலமாகப் பார்க்கப்படுவது என்றாலும், இயைபுத் தொடை மட்டும் வலமிருந்து இடமாகப் பார்க்கப் படுவதாய் உள்ளது. காரணம், இயைபுத் தொடை, இறுதிச் சீரில் இருந்து தொடங்குவதாய் இருப்பதேயாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 19:01:09(இந்திய நேரம்)